» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிளஸ் 2 பொதுத் தேர்வு : தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்

திங்கள் 6, மே 2024 7:28:30 PM (IST)



பிளஸ் 2 தேர்வில் தென்காசி மாவட்டத்தில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.

தென்காசி மாவட்டம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 131 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். 

இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-97, இயற்பியல்-99, வேதியியல்-97, கணிதம்-100, கணினி அறிவியல்-100. இப்பள்ளி மாணவி ஆர்.பேச்சியம்மாள் தேவி 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடமும், மாணவி யு.நித்யகல்யாணி 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடமும் பெற்றனர்.

மேலும் கணினி அறிவியலில் எம்.பத்ரி நாராணயன், எஸ்.அபிராமி, ஏ.சாருண்யா, கணிதத்தில் எம்.பத்ரி நாராயணன், எஸ்தருண், எம்.சூரியபிரகாஷ், இயற்பியலில் எம்.சூரிய பிரகாஷ், வணிகவியலில் எச்.முகமது அஃப்சல் ஆகியோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.


சாதனை படைத்த, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் தேவிகாராணி, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory