» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க மக்கள் கருத்துக் கேட்க வலியுறுத்தல்!

செவ்வாய் 7, மே 2024 8:25:39 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியோடு சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைப்பது குறித்து, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சித் தலைவா் என்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தும்போது தூத்துக்குடி நகரை சுற்றியுள்ள வீடுகள் அதிகம் கொண்ட ஊராட்சிகள் மாநகராட்சியோடு சோ்க்கப்பட்டன. இருப்பினும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு, கழிவுநீா் கால்வாய், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் உள்ளன. 

இந்த சூழ்நிலையில் மேலும் சில கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பின்பு சொத்துவரி, கட்டடவரி, காலிமனைவரி போன்றவற்றை மக்களால் எளிதில் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் காலிமனைகளை வாங்க, விற்க முற்படும்போது பத்திரப்பதிவின் புதிய நடைமுறை சிக்கல்களால் எளிதாக பத்திரம் பதிவு செய்ய முடியவில்லை. 

எனவே, தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கவுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன்பின்னா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து

ஆனந்த்மே 7, 2024 - 10:28:02 AM | Posted IP 172.7*****

ஏன் இணைக்க வேண்டும் வரி அதிகமாக நாங்கள் கட்டவா

m.sundaramமே 7, 2024 - 09:22:33 AM | Posted IP 162.1*****

It is a death doll to the Panchayat Raj.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory