» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2.49 கோடி வருவாய்

செவ்வாய் 7, மே 2024 5:55:32 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.2.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் மே மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் காவடி பிறை மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் சிவகாசி உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அதில் கோவில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 47 லட்சத்து 76 ஆயிரத்து 188 ரூபாயும், கோசாலை பராமரிப்பு ரூ.49,083, மற்றும் யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1,19,428 என மொத்தம் உண்டியல்களில் ரூ.2.49 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 1100 கிராம் தங்கமும், 24 ஆயிரம் கிராம் வெள்ளியும், 47 ஆயிரம் கிராம் பித்தளை, 5ஆயிரம் கிராம் செம்பு, 5ஆயிரம் கிராம் தகரம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 326 அயல் நாட்டு ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளது. 


மக்கள் கருத்து

கடவுள் பக்தன்மே 8, 2024 - 08:06:38 AM | Posted IP 162.1*****

கோடை வெயிலை சமாளிக்க அந்த பணத்தை வைத்து பக்தர்களுக்கு இலவசமாக மோர் வழங்கலாமே

கடவுள்மே 7, 2024 - 07:23:18 PM | Posted IP 172.7*****

என் பேரை சொல்லி ஊரை ஏமாற்றிக் கொண்டு உள்ளனர் இந்த மனிதர்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory