» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
திங்கள் 27, மே 2024 8:27:24 AM (IST)
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் கோடையில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் கனமழை கொட்டியதால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் மழை பெய்யவில்லை, மிதமான வெயில் அடித்தது. அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசியது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு இல்லாததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் அனுமதித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர். கேரள மாநிலத்தில் இருந்தும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 வரையில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளில் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அருவிக்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)
