» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் தீயிட்டு அழிக்கப்பட்ட 5191 கிலோ போதைப் பொருட்கள்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 5:56:31 PM (IST)

காவல்துறை தென்மண்டலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 5191 கிலோ போதைபொருட்கள் திருநெல்வேலியில் தீயிட்டு அழிக்கப்பட்டன.
காவல்துறை தென்மண்டலத்தில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும், திருநெல்வேலி, மதுரை ஆகிய மாநகரங்களிலும் போதைப்பொருட்கள்வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5191 கிலோ 413 கிராம் போதைப்பொருட்கள்காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணைகளைப் பிறப்பித்திருந்தன.
போதைப்பொருள் ஒழிப்பு தினமான இன்று (12.08.2024) தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி மாணவ, மாணவிகளால் ஏற்கப்பட்டது.
இத்தினத்தை முன்னிட்டு காவல்துறையால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா ஆணைப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைதலைவர் பா. மூர்த்தி தலைமையில் காவல்துறை தென்மண்டல போதைப் பொருள் அழிப்பு குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல்துணை ஆணையர் ஆதர்ஷ்பச்சேரா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாங்கரே பிரவின் உமேஷ், மதுரை தடயவியல் நிபுணர் விஜயதரணி ஆகியோர் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள ASEPTIC SYSTEMS BIO MEDICAL WASTE MANAGEMENT COMPANY என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் மற்றும் நாங்குநேரி உதவி காவல் கண்காளிப்பாளர் பிரசன்ன குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!
புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)


