» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)
நெல்லை மாநகரில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்துள்னர்.
நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாஹீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பாக இருவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக முகமது தவுபிக் (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் பெருமாள்புரம் காவநிலையம், ரெட்டியாப்பட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரலில் போலீசார் விரைந்து சென்றனர். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது, தலைமை காவலர் ஆனந்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து முகமது தவுபிக் (எ) கிருஷ்ண மூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
