» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மார்க் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 24, மார்ச் 2025 3:45:00 PM (IST)

தூத்துக்குடி டாஸ்மார்க் கடைகளில் எம்.ஆர்.பி.யை விட அதிகமாக விலைக்கு மதுபானம் விற்பனை குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி டூவிபுரம் ராஜவேல், காசிலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "பல டாஸ்மார்க் கடையில் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு காவல்துறை பாதுகாப்புடன், மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றது. இதனை கண்டித்து பாஜக சார்பாக இவ் ஊழல் மீது தமிழக முதல்வர் துணை முதல்வர் படங்கள் ஒட்டியும் வருகின்றனர். அவர்களை காவல்துறை கைது செய்கிறது. 

ஆனால் அதிக விலைக்கு விற்கும் டாஸ்மார்க் ஊழியருக்கு சாதகமாக செயல்படுகிறது. டாஸ்மார்கில் அதிக விலைக்கு மது விற்பதை காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அரசு அதிகாரிகள் பில்லுக்கு மேல் அதிக விலைக்கு பொருளை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை விலை, கடையின் உள்ள ஸ்டாக் எழுதியும் வைக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர். 


மக்கள் கருத்து

MarimuthuMar 24, 2025 - 06:39:31 PM | Posted IP 162.1*****

Appadye tasmac vaasalil police vaithu fine podunka, vilankirum, virati pidithu case podraanka, maatunaa 15000selavu 😡😡😡😡😡😡😡😡😡😡😡

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory