» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரிக்கை!

செவ்வாய் 25, மார்ச் 2025 11:13:04 AM (IST)



தூத்துக்குடியில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலத்தில் இரும்பு பட்டைகள் ஒலி எழுப்புவதால் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டயபுரம் ரோட்டில் 3-வது ரயில்வே கேட் மேம்பாலம் அமைந்து உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 அடுக்குகள் பழுதடைந்தது. இதனை கண்டறிந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. 

இந்நிலையில், தற்போது பாலத்தின் இரும்பு பட்டைகள் கழண்டு வாகனங்கள் செல்லும்போது பெரும் ஒலி எழுப்புகிறது. இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 


மக்கள் கருத்து

PearlMar 25, 2025 - 01:31:20 PM | Posted IP 172.7*****

Sari antha palathula vandi poga kudathuna railway crossing la poguma illa vera option iruka atha sollunga first

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory