» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

செவ்வாய் 25, மார்ச் 2025 3:05:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்களுக்கு வரும் 29 ஆம் தேதி பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் மதுவிலக்கு தொடர்பான குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 29.03.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைத்து பொது ஏலம்  நடைபெற உள்ளது.

மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 27.03.2025 மற்றும் 28.03.2025 ஆகிய 2 நாட்கள் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 29.03.2025 அன்று காலை 08.00 மணிக்குள் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ரூபாய் 1000/- (ஆயிரம் மட்டும்) முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். முன் பணம் செலுத்திய நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் : 9363229366ல் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என  மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து

SivaSriMar 25, 2025 - 03:20:33 PM | Posted IP 172.7*****

வாகனங்கள் விற்பனை செய்து மாற்று இருசக்கர வாகனம் exchange offerல் எடுத்தாச்சு டிசம்பர் மாதம். TVs company மாற்று வண்டி எடுத்த பின்னர் பழைய வண்டிக்கு vahan fine எங்கள் தொலைபேசிக்கு வருகிறது.அப்போ RDO அலுவலகத்தில் மாற்றுவதற்கு ₹3000வேண்டும் என்று அடிமாட்டு ₹200000 எடுத்த வண்டிய வெறும் ₹77,000ஆயிரத்துக்குதான் எடுத்தார்கள்.இன்று விற்பனை செய்த வண்டிக்கு எங்கள் ஃபைன் போட்டு உள்ளார்கள்.TVS company செய்வது சரிதானா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory