» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமியை துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 28, மார்ச் 2025 5:21:36 PM (IST)
சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முதியவருக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு வெங்கட்ராயபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த அந்தோணி (83), ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்தோணி மீது வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (27,3,2025) நீதிபதி சுரேஷ்குமார் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதில் போக்சோ வழக்கு குற்றவாளியான அந்தோணிக்கு மூன்றரை (3 1/2) ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட ஏ.எஸ்.பி. பிரசன்னகுமார் மற்றும் நாங்குநேரி போலீசாரை நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
