» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்

வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)



திருநெல்வேலியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா துவக்கி வைத்தார்.

1987-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டி விட்டது என்ற அபாய எச்சரிக்கையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஐ.நா.சபை ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ம் நாளை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றுதுடன் விழிப்புணர்வு ரதம் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது. 

இப்பேரணியில் திருநெல்வேலி அரசு கலை பண்பாட்டுத்துறை கலைஞர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். பேரணியில் மாணவிகள் குடும்ப நலம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கொண்டு சென்றனர். மேலும், குடும்பநலம் மற்றும் தாய்சேய் நல சேவைகளை தங்கு தடையின்றி வழங்குவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன், இணை இயக்குநர் (பொ) மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) வேல்முருகன் கணேஷ் மற்றும் துணை இயக்குநர்கள் துரை (காசநோய்), அலர்சாந்தி (தொழுநோய்), மாநகர நல அலுவலர் ராணி, மாவட்ட குடும்ப நலத்துறை சார்ந்த மக்கள் கல்வி தகவல் அலுவலர் (பொ) ஜெயசித்ரா, இளநிலை நிர்வாக அலுவலர் கூத்தநயினார் (எ) செந்தில், புள்ளிவிபர உதவியாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory