» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)

புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்காக தமிழக அரசால் ஆண்டுதோறும் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இப்புனித பயணம் புத்த மத தொடர்புடைய 1. பீகாரில் உள்ள புத்த கயா, 2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர் 3. வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில் 4. பீகாரில் உள்ள ராஜ்கிர், வைஷாலி, 5. நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற புனித தலங்களையும், 

சமண மத தொடர்புடைய 1. இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், 2. ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி 3. குஜராத்தில் உள்ள பாலிடனா, 4. பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள், 5. கர்நாடகவில் சரவணபெலகோலா போன்ற புனித தலங்களையும் மற்றும் 

சீக்கிய மத தொடர்புடைய 1. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், 2. பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 3. பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல், குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் போன்ற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 30.11.2025-க்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலகமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory