» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் அருட் சகோதரிகளால் நடத்தப்படும் புனித சேவியர் பள்ளியில் குட்டி குழந்தைகளின் அட்டகாசமான விதைப்பந்து தயாரிப்பு பார்ப்போரையும், கேட்போரையும் பிரமிக்க வைத்தது.
250 குழந்தைகள், 2 மணி நேர ஆத்மார்த்த உழைப்பால் 25,360 விதைப்பந்துகளை செய்து முடித்து ஆச்சரியப்பட வைத்தனர். பள்ளி தாளாளர் அருட் சகோதரி ஜெய மேரி தலைமை தாங்கி விதைகள் மீது புனித நீர் தெளித்து அத்தனையும் மரமாகி, சோலையாக பிரார்த்தனை செய்தார். பள்ளி முதல்வர் அருட் சகோதரி புனிதா முன்னிலை வகித்தார். ஆசிரியை ரேவதி வரவேற்றார். வரம் அமைப்பு இன்ஜினியர் நாகராஜன், பேட்டரி விநாயகம், பசுமை ஜவஹர் விதைப்பந்துகள் தயாரிப்பிற்கு பக்க பலமாக இருந்தனர். சமூகநல ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ. திருமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாமிரபரணி நதியின் தாகம் தீர்க்க விதைப்பந்துகள் உதவும் என பேசினார்.
ஆசிரியைகள் செலின், பீமு, ரதி, விஜி, பேபி, சுபா, சிவராணி, தங்கம், ஆரோக்கிய ஜாஸ்மின், வசந்தகுமாரி குழந்தைகள் விதைப்பந்து தயாரிப்பை ஒருங்கிணைத்தனர். தன் னார்வலர்களாக மாணவ மாணவியர் சஷினி, பூர்விகா, சிவஹரிணி, ஜாக்சன், பிளஸ்ஸி, சபரீஷ் உலகநாதன், மீர்ஜா, முத்து ஜகதீஷ், அக்ஷிதா, ஜெசிகா ஜேன், முத்துலட்சுமி மண், தண்ணீர், விதவிதமான மர விதைகளை ஒருங்கிணைத்தனர்.
ஐந்தாம் வகுப்பு மாணவர் இசக்கிமுத்து 1600 விதைப்பந்துகளும், மாணவர் சக்திவேல் 1500 விதைப்பந்துகளும் செய்து சாதித்தனர். எல்.கே.ஜி, யு.கே.ஜி, ப்ரீ. கே.ஜி குழந்தைகளும் விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபட்டது. குறிப்பிடத்தக்கது அனைவருக்கும் ஹரி பிரியாணி அதிபர் ஹரி சான்றிதழ் வழங்கினார். 50 லட்சம் விதைப்பந்துகளை விரைவில் எட்டப் போகிறோம் என திருமாறன் அறிவித்தார். ஜவஹர், நாகராஜன், விநாயகம், பள்ளி முதல்வர் புனிதாவுக்கு "எட்டாவது அதிசயம்” விருதுகளை திருமாறன் வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஈர்ப்பு வாகனம் 30ஆம் தேதி பொது ஏலம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:42:47 PM (IST)

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)


