» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!

வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)


புனித வெள்ளி அன்று தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுவதற்கு தேர்தல் அறிவிப்பானைக்கு முன்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் கான்ஸ்டான்டைன் மறைமாவட்ட முதன்மைகுரு பேரருட்தந்தை ஜோசப் ரவிபாலன், தலைமைச் செயலர் பேரருட்தந்தை சகாய லூட்ரின், மதுவிலக்குசபை இயக்குநர் அருட்தந்தை ஜெயந்தன் டி கிரேஸ், மற்றும் ரவீந்திரனை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு இயக்கம் தண்ணார்வ இயக்கத்தினர் சந்தித்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன், தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவை அளித்தனர். 

அந்த மனுவில், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும் விசுவாசமான இயேசு இறந்த புனித வெள்ளி ஏப்ரல் 3 ஆம் தேதி நினைவுகூறப்பட இருக்கிறது. அன்றைய நாட்களில் கிறிஸ்தவர்கள் இரத்ததானம் முகாம் நடத்துதல், மாநகரம் மற்றும் கிராம வீதிகளில் மக்கள் பெருமளவில் கூடி சிலுவைப் பாதை ஊர்வலம், அமைதிப்பவணிகள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் என்று கிறிஸ்தவர்கள் சபைகள் கடந்து அனைத்து கிறிஸ்தவர்களும் அந்த நாளை ஒரு தியாக நாளாக கடைபிடித்து வருகிறார்கள். 

ஆகவே, அந்த நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே, டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் விடுமுறையோடு மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு உத்தரவில் ஏற்கனவே, மகாவீரர் ஜெயந்தி, மிலாடி நபி, வள்ளலார் நினைவு விடுமுறை நாட்களில் மதுக்கடைகளும் மூடப்பட்டு வருகிறது. நாங்கள் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களளை சந்தித்து மனு வழங்கி உள்ளோம். 

ஆகவே, அருள்கூர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பானைக்கு முன்பாக சட்டமன்றத்தில் இதை ஒரு சிறப்பு தீர்மானமாக எடுத்து தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டுமென்று உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory