» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

புதன் 28, ஜனவரி 2026 5:27:33 PM (IST)



திருநெல்வேலியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தில் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தில் இறுதி ஆண்டு பயிலும் 2480 தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.

விழாவில் அவர் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்கள் நவீன உலகிற்கு தங்களை ஏற்றவாறு திறனை வளர்த்து கொள்வதற்கும், உலகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும், "உலகம் உங்கள் கையில்” என்னும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு அரசு கல்வித் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் 20 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 10 இலட்சம் மாணவ,மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் முதற்கட்டமாக 29 அரசு மற்றும் அரசு சார்ந்த கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 9703 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 27 தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் 2480 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 

 மடிக்கணினிகள் பெற்ற மாணவ, மாணவியர்கள் முறையாக பயன்படுத்தி உலக அளவில் பல நல்ல தகவல்களை பெற்று தங்களது கல்வி திறனை வளர்த்து கொள்ள வேண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்று பெற்றோர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், இந்த மடிக்கணினி மூலம் தங்களது சமூக-பொருளாதாரத்தை முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

உயர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் மூலம் பிற மாநிலங்களை விட உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், கல்லூரி முதல்வர் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory