» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவியில் குடியரசு தினவிழா கோலாகலம்

திங்கள் 26, ஜனவரி 2026 8:35:39 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி பகுதியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பி.சு. குமார் தேசிய கொடியேற்றினார். இதில், அலுவலகப் பணியாளர்கள் சண்முகவள்ளி, சர்மிளாபானு மற்றும் கலைச் செல்வி, செய்யது அலி, சாகுல்ஹமீது, ஷேக்அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

முக்கூடல் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் இரா. பொன்விசாலாட்சி தேசிய கொடியேற்றினார். அலுவலகப் பணியாளர்கள், ஆவண எழுத்தர்கள் கலந்துகொண்டனர். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவி இ. பார்வதி கொடியேற்றினார். துணைத் தலைவர் க. இசக்கிபாண்டியன், பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கல்லிடைக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை பாமா தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்றத் தலைவி இ. பார்வதி, துணைத் தலைவர் க. இசக்கிபாண்டியன், முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மு. பீர்முகம்மது, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவர், மாணவிகளுக்குசான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், சேரன்மகாதேவி தாசில்தார் காஜாகரிபுன் நவாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் காதர், சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

பத்தமடை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவி ஆபிதா ஜமால் தேசிய கொடியேற்றினர். இதில், துணைத் தலைவர், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் தலைவி தமயந்தி பழனி தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் பரமசிவம், துணைத் தலைவர் சுந்தர்ராஜன், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory