» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

மணிமுத்தாறு அணைப் பகுதியில் ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் சுற்றுலாத் துறை சார்பில் ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தலைமையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது "தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 2023-2024 ஆம் அண்டு சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கையின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு அணை சாகச சற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சுழல் சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும் என அறிவித்தார்கள். அதன்படி தமிழ்நாடு அரசு மணிமுத்தாறு அணை சாகச சற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சுழல் சுற்றுலா தளமாக மேம்படுத்துவதற்கு ரூ.3.59 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று மணிமுத்தாறு அணை பகுதியில் ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகளுடன் சுற்றுச்சுழல் சுற்றுலா தளமாக மேம்படுத்துவதற்கான பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது. மணிமுத்தாறு அணை பகுதியில் பூங்கா மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள் அதிகஅளவு வருகை புரிவார்கள். பூங்கா மேம்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நித்யகல்யாணி, அம்பாசமுத்திரம் நகராட்சி தலைவர் கே.கே.சி பிரபாகர பாண்டியன், வி.கே.புரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பரணி சேகர், கல்லிடைகுறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் இசக்கிபாண்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சாலமோன் டேவிட், பாஸ்கர், களக்காடு நகர்மன்ற துணை தலைவர் பி.சி.ராஜன், மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)




