» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரியில் நிறுத்தம் : நெல்லை எம்பிக்கு பயணிகள் நலச்சங்கம் நன்றி
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 9:54:22 AM (IST)

புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் பெற்று தந்த ராபர்ட் ப்ரூஸ் எம்பிக்கு பயணிகள் நலச்சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
கொரோனா காலத்துக்குப் பிறகு நாங்குநேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லாமல் இருந்த மதுரை புனலூர் விரைவு ரயிலுக்கு நாங்குநேரி ரயில் நிலையத்திற்கு நிறுத்தம் பெற்று தந்த திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸுக்கு நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை தாலுகா ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்தனர்.
நல சங்க தலைவர் வழக்கறிஞர் ஏ.சி.பேச்சிமுத்து, நாங்குநேரி வளர்ச்சி கமிட்டி ஆலோசகர் செ. துரைச்சாமி, நாங்குநேரி நகர காங்கிரஸ் தலைவர் சுடலைக்கண்ணு, நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தமிழ்ச்செல்வன், மதிமுக சட்டத்துறை துணைச் செயலாளர் வழக்கறிஞர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 5:52:35 PM (IST)

வெங்காடம்பட்டியில் இரு பெரும் விழா: 190 வது திருவள்ளுவர் சிலை திறப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 3:21:48 PM (IST)

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)


