» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை : நெல்லையில் பரிதாபம்
ஞாயிறு 17, ஆகஸ்ட் 2025 8:58:23 PM (IST)
நெல்லையில் ரயில்முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சிவசங்கர் (40). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, சிவசங்கர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மதியம் அவர் தனது வீட்டின் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார்.
அப்போது அந்த வழியாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவசங்கர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்த பிரச்சினையால் சிவசங்கர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கனிம வளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை!
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:06:49 PM (IST)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

கல்லூரி பேராசிரியை வீட்டில் 31 பவுன் நகை திருட்டு : வேலைக்கார பெண் உள்பட 3 பேர் கைது!
வெள்ளி 24, அக்டோபர் 2025 8:28:01 AM (IST)

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம், பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 23, அக்டோபர் 2025 4:02:33 PM (IST)

தென்காசி மாவட்டத்திற்கு அக்.29,30 தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம்!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:28:48 PM (IST)

கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு: அன்புமணி குற்றச்சாட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 3:07:40 PM (IST)




