» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமியை பலாத்காரம் செய்த ஆட்டுத்தரகருக்கு 25 ஆண்டு சிறை : நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 8:24:57 AM (IST)
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டுத்தரகருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தம்புபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா (58). இவர் சந்தைகளுக்கு சென்று ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் தரகர் ஆவார். கடந்த 2022-ம் ஆண்டு இவர் சிறுமியை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நைசாக ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா ஸ்டாலின் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்தையாவை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் நேற்று தீர்ப்பு அளித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக முத்தையாவுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்ற குற்றத்துக்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சாட்சிகளையும், ஆவணங்களையும் கோர்ட்டில் விரைவாக ஆஜர்ப்படுத்திய நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு தர்ஷிகா நடராஜன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, அரசு வக்கீல் உஷா ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் பாராட்டினார்.
நெல்லை மாவட்ட போலீசாரின் துரித நடவடிக்கையால் நடப்பு ஆண்டில் இதுவரை 14 போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 14 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்று எஸ்பி சிலம்பரசன் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டங்கள் தமிழகத்தில்... அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
திங்கள் 1, டிசம்பர் 2025 5:05:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 97.98% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்: ஆட்சியர் சுகுமார் தகவல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 12:43:02 PM (IST)

மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவி வெட்டிக் கொலை : நெல்லை வாலிபர் வெறிச்செயல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:31:41 AM (IST)

நடைபயிற்சிக்கு சென்ற ஆசிரியர் வெட்டிக் கொலை: சிறுவன் உட்பட 2பேர் வெறிச்செயல்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:25:37 AM (IST)

நெல்லையில் தொடர் மழையால் மூழ்கிய பயிர்கள் : லட்சக்கணக்கில் சேதம் - விவசாயிகள் வேதனை!
சனி 29, நவம்பர் 2025 4:15:15 PM (IST)

பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் : அரசுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
வெள்ளி 28, நவம்பர் 2025 12:16:08 PM (IST)




