» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நடைபயிற்சிக்கு சென்ற ஆசிரியர் வெட்டிக் கொலை: சிறுவன் உட்பட 2பேர் வெறிச்செயல்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 10:25:37 AM (IST)
திருவேங்கடம் அருகே நடைபயிற்சிக்கு சென்ற ஆசிரியர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சி.ஆர். காலனி மாரியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் சுதந்திரகுமார் (43). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அங்கு வேலையை விட்டுவிட்டு கடந்த 5 மாதங்களாக சொந்த ஊரில் தங்கியிருந்து அரசுப்பணி தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார்.
இவருக்கு திருமணமாகி விட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். நேற்று முன்தினம் மாலை கழுகுமலை- பழங்கோட்டை சாலையில் சுதந்திரகுமார் நடைபயிற்சிக்கு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அங்குள்ள காட்டுப்பகுதியில் அவர் மர்மமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்த குருவிகுளம் போலீசார் விரைந்து சென்று சுதந்திர குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அருகேயுள்ள ஆவுடையம்மாள்புரம் தெற்குத்தெருவை சேர்ந்த சுடலைமுத்து மகன் அஜித்குமார் (28) மற்றும் அவரின் உறவினரான 17 வயது சிறுவனிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது. செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அஜித்குமாரும், சிறுவனும் கழுகுமலை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
நேற்று காலை அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சுதந்திரகுமாருக்கு செல்போனில் உள்ள செயலி மூலம் அஜித்குமார் மற்றும் அவரின் உறவினரான சிறுவனின் அறிமுகம் கிடைத்தது. ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள 3 பேரும் நண்பர்களாக பழகினர்.
நேற்று முன்தினம் மாலையில் சுதந்திரகுமார் நடைபயிற்சிக்கு சென்றபோது, அங்கு வந்த அஜித்குமார், சிறுவன் ஆகியோர் சேர்ந்து அவரை ஓரினச்சேர்க்கைக்காக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 3 பேரும் மது அருந்திவிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுதந்திரகுமாருக்கும், அஜித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அஜித்குமாரும், சிறுவனும் சேர்ந்து அரிவாளால் சுதந்திரகுமாரை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. குருவிகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஓரினச்சேர்க்கை கும்பல் பலரை தாக்கியுள்ள நிலையில், தற்போது பள்ளி ஆசிரியரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)


MakkalDec 1, 2025 - 05:36:29 AM | Posted IP 172.7*****