» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.03.2026) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பெருமணல் மீனவ கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் பணிகளைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் தெரிவித்ததாவது: "மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மீனவர்களின் நலனைக் காக்கப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெருமணல் மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இப்பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தூண்டில் வளைவு நீட்டிப்பு மூலம் கடல் அரிப்பு முற்றிலுமாகத் தடுக்கப்படும். மீன்பிடிப் படகுகளை இயக்குவது எளிதாகும் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படும். மீனவர்களின் சமூக-பொருளாதார நிலை உயரும். மீனவர்களின் நலன் கருதி இத்திட்டத்தைத் தந்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு மீனவ மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சா. ஞானதிரவியம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு. ராஜத்துரை, அருட்தந்தை பிரபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு. பாஸ்கர், முக்கியப் பிரமுகர்கள் திரு. ஜோசப் பெல்சி, திரு. அலெக்ஸ் அப்பாவு மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)


