» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)
தென்மாவட்டப் பயணிகளின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06135): தாம்பரத்திலிருந்து ஜூலை 30, ஆகஸ்ட் 1, 6, 8, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்) காலை 5:00 மணிக்குப் புறப்படும் பகல் நேர சிறப்பு ரயில் (06135), அதே நாள் மாலை 3:30 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.
தென்காசி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06136): மறுமார்க்கத்தில், தென்காசியிலிருந்து ஜூலை 31, ஆகஸ்ட் 2, 7, 9, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) காலை 5:00 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06136), அதே நாள் மாலை 3:15 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.
மொத்தம் 23 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது என்பதால் பயணிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)


