» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் சார்பாகத் தேசிய சுகாதாரக் குழுமத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் இணை இயக்குநர் நலப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர் (Account Assistant - 1), மருத்துவ உளவியலாளர் (Clinical Psychologist - 1), மனநலச் செவிலியர் (Psychiatric Staff Nurse - 1) ஆகிய 3 பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.
இப்பணிகள் தற்காலிகமானவை என்பதால் பிற்காலத்தில் நிரந்தரப் பணியோ, முன்னுரிமையோ அல்லது பிற சலுகைகளோ கோர இயலாது. இப்போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தினை https://tirunelveli.nic.in என்ற மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி மற்றும் உரிய சான்றுகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 08.08.2026 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ, "மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.16/22, பழைய காவல் மருத்துவமனை சாலை, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002" என்ற முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)


