» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் நாயை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது: வீடியோ வைரலானதால் பரபரப்பு!
வெள்ளி 10, அக்டோபர் 2025 8:11:23 PM (IST)
தூத்துக்குடியில் வளர்ப்பு நாயை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி நேதாஜிநகர் 11-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவர். இவர் வீட்டில் 2 நாய்களை வளர்த்து வந்தார். இரவு நேரங்களில் வீட்டின் முன்புறம் நாய்களை சங்கிலியால் கட்டி போட்டு வைப்பது வழக்கம். அந்த வழியாக யாரேனும் சென்றால் அந்த நாய்கள் குரைக்கும். அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாரிசெல்வம் (22). இவர் அந்த வழியில் செல்லும் போது அந்த நாய்கள் குரைத்து உள்ளன.
இதனால் நாயின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குடிபோதையில் சென்ற மாரிசெல்வத்தை பார்த்து நாய்கள் குறைத்து உள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் 2 நாய்களையும் சரமாரியாக கல்லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ஒரு நாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. மற்றொரு நாய் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
இது குறித்து மாரியப்பன் சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதே நேரத்தில் மாரிசெல்வம் நாயை அடித்தை வீடியோ பதிவு செய்து புளூகிராஸ் அமைப்புக்கும் அனுப்பினார்களாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதைத் தொடர்ந்து சிப்காட் போலீசார் மாரி செல்வத்தை கைது செய்தனர். மேலும் புளூகிராஸ் அமைப்பினர் காயம் அடைந்த நாயை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வியாழன் 27, நவம்பர் 2025 12:12:42 PM (IST)

வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, நவம்பர் 2025 11:56:38 AM (IST)

கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!
புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)

பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)




