» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது

சனி 10, ஜனவரி 2026 12:52:16 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஹரி நாடாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/harinadar_1768029706.jpgசென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்பட்டது. தனது நண்பர் மூலம் திருநெல்வேலியைச் சேர்ந்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை அணுகினார். அப்போது, ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்த ஹரி நாடார், அதற்குப் பிரதிபலனாக ரூ.70 லட்சத்தை தொழிலதிபரிடம் பெற்றுக் கொண்டார்.

ஆனால், கடன் பெற்றுத் தரவில்லை, வாங்கிய ரூ.70 லட்சத்தையும் அவர் திருப்பி தரவில்லை. இந்நிலையில், தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் ரூ.70 லட்சம் மோசடி செய்தது உறுதியான நிலையில், ஹரி நாடார், உடந்தையாக இருந்த சேலத்தை சேர்ந்த பாபு ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory