» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை

வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

நெல்லையைச் சேர்ந்த மருத்துவ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பாரதி நகரை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி இறுதி ஆண்டு படித்து வந்தார். மாணவி வாடகைக்கு வீடு எடுத்து மற்றொரு மாணவியுடன் தங்கி படித்து வந்தார். சக மாணவி விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சக மாணவி விடுமுறை முடிந்து வீடு திரும்பினார்.

அப்போது அறையின் கதவு வெளிப்புறமாக சாத்தப்பட்டு இருந்தது. கதவை திறந்து பார்த்த போது வர்ஷினி மர்மமான முறையில் இறந்துகிடந்ததை கண்டு கதறி அழுதார். இது குறித்து அருகில் வசித்து வந்த சக மாணவிகள் இரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார், வர்ஷினியின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

முதல் கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: வர்ஷினி நெல்லையை சேர்ந்த திருமணமான சித்த மருத்துவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை மாணவியின் தந்தை வரதராஜன் கண்டித்து உள்ளார். ஆனால் தந்தையின் பேச்சை அவர் கேட்கவில்லை என்று தெரிகிறது. வரதராஜன் நேற்று முன்தினம் மாலை சேலம் வந்து மகளை பார்த்துவிட்டு இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து சென்றது தெரிய வந்ததுள்ளது. அவருடைய செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.

மகளை பார்த்து விட்டு சென்றவர் சொந்த ஊருக்கு செல்லவில்லை. எனவே மாணவியின் சாவுக்கு தந்தை காரணமா? முறை தவறிய காதல் பிரச்சினையால் குடும்பத்தினரின் நெருக்கடியால் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் மாணவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரிய வரும் என்று கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory