» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
சனி 11, அக்டோபர் 2025 5:07:21 PM (IST)
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து வரும் எந்தவொரு Apk file-களையும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட சைபர்கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் வாட்ஸ்ஆப் மூலமாக பண மோசடி நடைபெற்று வருகிறது.
வாட்ஸ்ஆப் செயலி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) குழுக்களில் (GROUP) உள்ள நபர்களின் எண்கள் மூலமாகவோ RTO Challan App-ஐ (Apk file) install செய்து உங்கள் வாகனத்திற்கு Fine amount-ஐ (தண்டத்தொகை) உடனே செலுத்த வேண்டும் என மெசேஜ் வரும். அதை update செய்யவில்லை என்றால் உங்களது வாகனத்தின் லைசென்ஸ் முடக்கபட்டுவிடும் என செய்தி இருக்கும்.
அதை உண்மையென நம்பி கிளிக் செய்துவிட்டால் உங்கள் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படும்; மற்றும் உங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்பட்டுவிடும். மேலும் இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் மெசேஜ் தானாகவே உங்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உங்களது மொபைல் எண்ணில் இருந்தே உங்களுக்கு தெரியாமலே பகிரப்படும். இந்த ஆர்.டி.ஓ. செல்லான் ஆப்பை டவுன்லோடு செய்தால் அவர்களுடைய வாட்ஸ்ஆப் நம்பரும் தொடர்ச்சியாக ஹேக் செய்யப்பட்டும் மற்றும் மொபைல் போனில் உள்ள வங்கி கணக்கு தொடர்பான தரவுகளையும் ஹேக் செய்தும் பண மோசடி செய்வார்கள்.
இதே போன்று வாட்ஸ்ஆப் மூலமாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) உங்கள் வாட்ஸ்ஆப் குழுக்களில் உள்ள தெரிந்த நபர்களின் RTO Challan App- fine amount எனவும், sbi bank, axis bank, union bank etc., ஆகிய வங்கிகளின் reward points எனவும் (அ) அரசாங்க நலதிட்ட உதவி, மானியம் என்று வரும் எந்த Apk file-களையும் உங்களது மொபைலில் பதிவிறக்கம் (INSTALL) செய்ய வேண்டாம். இது போன்று போலியான மெசேஜ்கனை உடனே பிளாக் (Block) செய்ய வேண்டும்.
இது போன்ற சைபர் கிரைம் நடைபெற்றால் சைபர் கிரைம் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற Toll Free எண்ணிற்கு அழைத்து உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி இடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
வியாழன் 27, நவம்பர் 2025 5:06:22 PM (IST)

குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
வியாழன் 27, நவம்பர் 2025 4:24:35 PM (IST)

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வியாழன் 27, நவம்பர் 2025 12:12:42 PM (IST)

வீடு புகுந்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 27, நவம்பர் 2025 11:56:38 AM (IST)

கனமழையில் வ.உ.சிதம்பரனார் மணிமண்டப சுற்றுச்சுவர் சேதம்: தற்காலிகமாக சீரமைப்பு!
புதன் 26, நவம்பர் 2025 5:02:55 PM (IST)

பேருந்து விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி: தமிழக அரசு உத்தரவு!
புதன் 26, நவம்பர் 2025 4:40:16 PM (IST)




