» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தீபாவளி புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்: கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல்!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:21:42 AM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை, பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள், பலகாரங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வாரவிடுமுறை தினமான நேற்று ஏராளமானவர்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லை வடக்கு ரத வீதி, வண்ணார்பேட்டையில் தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகள் எடுக்க வந்த பெரும்பாலானவர்கள் மேம்பாலத்திற்கு கீழே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தார்கள்.
மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வண்ணார்பேட்டை பகுதியில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது
சனி 10, ஜனவரி 2026 12:52:16 PM (IST)

ஜன.10, 11ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:39:06 PM (IST)

