» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

வெள்ளி 24, அக்டோபர் 2025 8:30:32 AM (IST)

நெல்லை அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி, மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (31). இவர் மகாராஜநகர் உழவர்சந்தை அருகே வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (60) மகள் அன்னமுத்து லட்சுமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

சங்கர் தனது மாமியார் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்றாலும் குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பது இல்லையாம். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சங்கர் தனது அண்ணன் மற்றும் உறவினர் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

அப்போது கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், அங்கிருந்த அரிவாளை எடுத்து அன்னமுத்து லட்சுமியை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க முயன்ற மாரியம்மாள் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இருவரும் காயமடைந்தனர்.

சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்த 2 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனடிப்படையில் நேற்று சங்கரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory