» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன் முன்னிலையில் இன்று (06.02.2026) தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து இன்று வடக்கு பச்சையாற்று நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் முழு கொள்ளளவில் நிரம்பியவுடன் தானாக நிரம்பி வழிந்தோடக்கூடிய கட்டுப்பாடற்ற வழிந்தோடி உள்ளது. இந்நீர்தேக்கத்தின் மூலம் மொத்தம் நாங்குநேரி வட்டத்திலுள்ள 33 கிராமங்கள் படைந்து வருகின்றன. வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து 1276.39 ஏக்கர் பாசனம் பெறும் நிலங்களுக்கு 06.02.2026 முதல் 31.03.2026 வரை 54 நாட்களுக்கு 51.06 மில்லியன் கன அடிக்கு மிகாமல் பிசான சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்தேக்கத்தில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன் பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் விநியோகப்பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, செண்பகநந்தினி, களக்காடு நகர்மன்ற தலைவர் சாந்தி சுபாஷ், துணைத்தலைவர் பி.சி.ராஜன், வட்டாட்சியர் பாலமுருகன், உதவி பொறியாளர்கள் விக்னேஷ், கிருஷ்ணமூர்த்தி, வெண்மதி வேந்தன், விஜயகணேஷ், முக்கிய பிரமுகர் கிராகாம்பெல் உட்பட அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

சாக்லேட் தருவதாக கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ ட்டத்தில் வாலிபர் கைது!
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:28:55 AM (IST)

போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:47:50 PM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்கள் : ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 3:46:07 PM (IST)

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகள்: ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்!
சனி 31, ஜனவரி 2026 5:25:10 PM (IST)

