» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே மேக்கரை பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மூதாட்டி மற்றும் அவரது பேரனைக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் மற்றும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்துத் தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேக்கரை டேம் ரோடு பகுதியைச் சேர்ந்த அப்துல்கனி மனைவி சைத்தான் பீவி (70). கடந்த 11.07.2022 அன்று நள்ளிரவு 11 மணி அளவில் இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த முகம்மதுகனி மகன் முகம்மது காசிம் (19) என்பவர் குடிபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவர் சைத்தான் பீவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்த மூதாட்டி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை வெளியே எடுத்துச் சென்றபோது, மூதாட்டியின் பேரன் காஜீர்அலி சத்தம் போட்டுள்ளார். இதனால் தன்னை அடையாளம் கண்டுவிடுவான் என்ற பயத்தில், முகம்மது காசிம் அருகில் கிடந்த கட்டையால் காஜீர்அலியின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் காஜீர்அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மறுநாள் காலையில் இக்கொலைச் சம்பவங்கள் குறித்துத் தகவல் அறிந்த அச்சன்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வேல்கனி மற்றும் போலீசார், இரு உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நடத்திய தீவிர விசாரணையில் முகம்மது காசிம் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பி. ராஜவேலு முன்னிலையில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளி முகம்மது காசிமுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கும் வகையிலான வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் குட்டி என்ற மருதப்பன் ஆஜராகி வாதாடினார். புலன் விசாரணை அதிகாரிகளாக அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் வேல்கனி மற்றும் தலைமைக் காவலர் இசக்கி ஆகியோர் செயல்பட்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: நெல்லை மாநகர காவல் துணை ஆணையராக ரமேஷ் பாபு நியமனம்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 10:49:27 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)

நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:37:00 AM (IST)


