» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்!

புதன் 5, நவம்பர் 2025 11:36:06 AM (IST)



தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தென்காசியில் அமைந்துள்ள பழமையான, மிகவும் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி திருவிழா, ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய திருக்கல்யாண திருவிழா ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இன்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது. 

உலகம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு மஞ்சள், சந்தனம், மா பொடி, திரவியம், இளநீர், பால், தயிர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 13ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும். தொடர்ந்து 15 ஆம் தேதி 11-ம் மாலை 6 மணிக்கு மேலாக காசி விஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுத்த பின்னர், இரவு 9.10 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இவ்விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் கட்டளைதாரர்களும் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory