» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)
12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (77) என்பவர் கடந்த 2024-ம் ஆண்டு, 12 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, தமிழ்செல்வனை கைது செய்தனர்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளி தமிழ்செல்வனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலைய போலீசார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 27 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 28 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 4 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் காவல்துறை நடவடிக்கையால் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)

கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் பேட்டி
வியாழன் 4, டிசம்பர் 2025 3:44:35 PM (IST)


