» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் தென்காசி மற்றும் சங்கரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் தோல்வியால் விபரீத முடிவு : அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!
செவ்வாய் 5, மே 2026 12:51:25 PM (IST)

தென்காசியில் 4 தொகுதிகளைக் கைப்பற்றிய திமுக கூட்டணி: சங்கரன்கோவில் அதிமுக வசமானது!
செவ்வாய் 5, மே 2026 8:52:28 AM (IST)

நெல்லையில் 3 தொகுதிகளைக் கைப்பற்றி தவெக அசத்தல்: பாளையைத் தக்கவைத்த திமுக!
செவ்வாய் 5, மே 2026 8:39:37 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக ஆதிக்கம்: அம்பையில் அதிமுக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:41:03 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை: அப்பாவு பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 11:04:50 AM (IST)

கோடை விடுமுறை எதிரொலி: நெல்லை, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜூன் வரை இடமில்லை!
சனி 2, மே 2026 3:41:41 PM (IST)


