» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்

புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)



திருநெல்வேலியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இன்று (17.12.2025) நடைபெற்ற ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் நிகழாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 17.12.2025 முதல் 27.12.2025 வரை ஒருவார காலம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவின் முதல் நாள் நிகழ்வாக 17.12.2025 அன்று சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற தமிழ்ச் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை பிடித்து விழிப்புணர்வுப் பேரணி பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலையிலிருந்து தொடங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள், லூர்து நாதன் சிலை அருகில் தொடங்கிய பேரணி அரசு அருங்காட்சியகத்தில் சென்று நிறைவடைந்தது.

இப்பேரணியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்த 25 க்கும் மேற்பட்ட நிருவாகிகள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள், தமிழறிஞர்கள், அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள், 200 மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பங்குபெற்ற கல்லூரி மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சட்டவார விழாவின் தொடர்ச்சியாக 18.12.2025, 19.12.2025, 22.02.2025 ஆகிய நாள்களில் அரசுப் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிச் சட்ட வரலாறு, மொழிப்பெயர்ப்பு, மொழிப்பயிற்சி, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி, கணினித் தமிழ் ஒருங்குறிப் பயன்பாடு முதலிய பொருண்மைகள் தொடர்பில் அரசு அருங்காட்சியகத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பேரணியில், மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் பெ.இளங்கோ உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory