» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி: ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:52:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவையான வேட்புமனு தாக்கல் தொடர்பான படிவங்களை அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா. சுகுமார் அவர்கள் இன்றுதொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து, மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் இராதாபுரம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான முக்கியப் படிவங்கள் தனி வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
இதில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் 1 முதல் 7A வரை, தபால் வாக்குக்கான படிவங்கள் மற்றும் படிவம் 26, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள், வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற பின் வழங்கப்படும் தேர்தல் சான்றிதழ் ஆகிய படிவங்கள் அந்தந்த தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டன.
இவை சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், மதுரை மற்றும் விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு அச்சகங்களிலிருந்து கொண்டு வரப்பட்டு, தற்போது தொகுதி வாரியாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அறையை ஆட்சியர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர் (Flying Squads), எந்தெந்தப் பகுதிகளில் உள்ளனர் என்பதை ஜி.பி.ஆர்.எஸ்கருவி மூலம் அகன்ற திரையில் கண்காணிக்கப்பட்டு வருவதை அவர் நேரில் பார்வையிட்டார்.
பங்கேற்ற அலுவலர்கள்:
இந்நிகழ்வில், பொறுப்பு அலுவலர் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை துணை ஆட்சியர் சிவகாம சுந்தரி, பயிற்சி துணை ஆட்சியர் செல்வி. கேரனோப்புக் லிதியா, உதவி பொறுப்பு அலுவலர் மாரிராஜா, பறக்கும்படை பொறுப்பு அலுவலர் இசக்கியப்பன், தேர்தல் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்கள், முகவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
வெள்ளி 1, மே 2026 12:27:16 PM (IST)

வெப்ப அலையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 1, மே 2026 10:30:26 AM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டருக்கு 16 ஆண்டு சிறை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 1, மே 2026 8:50:14 AM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

தாய்-மகன் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது; இருதரப்பு மோதல் - எஸ்பி நேரில் ஆய்வு
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:52:27 AM (IST)

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)


