» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: இருவர் கைது
வியாழன் 8, ஜனவரி 2026 7:59:54 AM (IST)
தூத்துக்குடியில் வீடுகளில் பதுக்கிய ரூ. 15 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில், டவுன் டி.எஸ்.பி. (பொ) ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தூத்துக்குடி ஜார்ஜ் சாலை, கோவில்பிள்ளை விளை ஆகிய பகுதிகளில் உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர். அங்கு 7.5 கிலோ போதைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக, ஜார்ஜ் சாலை, சூசை மாதவன் மகன் மரியநவமணி ஸ்மைலன் (37), தாளமுத்து நகர், கோயில்பிள்ளை விளையைச் சேர்ந்த சேவியர் மகன் மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ் (38) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து கைப்பேசிகள், 2 இரு சக்கர வாகனங்கள், ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 7.5 கிலோ ஹசீஷ் எனப்படும் கஞ்சா ஆயில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் ஜன.21ஆம் தேதி பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
வெள்ளி 9, ஜனவரி 2026 12:03:38 PM (IST)

பேட்டை சரக்கு வாகன முனையம், விற்பனை சந்தையில் ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:56:00 AM (IST)

பாஜக நிர்வாகியின் வீடு புகுந்து ரூ.26 லட்சம் நகை-பணம் கொள்ளை: நெல்லை அருகே துணிகரம்!
வெள்ளி 9, ஜனவரி 2026 8:23:56 AM (IST)

நெல்லை மருத்துவ மாணவி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
வியாழன் 8, ஜனவரி 2026 8:13:47 AM (IST)

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 7, ஜனவரி 2026 4:23:14 PM (IST)

ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
புதன் 7, ஜனவரி 2026 11:08:37 AM (IST)

