» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே அக்காவை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது: பரபரப்பு வாக்குமூலம்!

செவ்வாய் 20, ஜனவரி 2026 8:09:16 AM (IST)

நெல்லை அருகே அக்காவை சரமாரியாக வெட்டிக்கொன்றது ஏன் என கைதான வாலிபர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள தச்சன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் 2 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணம் ஆகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். ராதிகா (28) என்ற மகளும், கண்ணன் (25) என்ற மகனும் திருமணம் ஆகாமல் பெற்றோருடன் வசித்து வந்தனர். கண்ணன் கூலி வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த ராதிகாவிற்கும், கண்ணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அரிவாளை எடுத்து ராதிகாவை சரமாரியாக வெட்டிக்கொலை ெசய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, ராதிகாவிற்கு, அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒருவருடன் பழக்கம் இருந்து வந்தது. இது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் கண்ணன் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் கண்ணன் தனது அக்காவை கண்டித்து வந்தார். சம்பவத்தன்று செல்போனில் ராதிகா யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த கண்ணன், செல்போனை கேட்டு தகராறு செய்தார். ஆனால் ராதிகா தனது செல்போனை கொடுக்கவில்லை. இதனால் அத்திரம் அடைந்த கண்ணன் தனது அக்காவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. 

இதுகுறித்து கண்ணன் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், ‘‘எனது அக்கா திருமணம் ஆன ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்தார். நான் பலமுறை கண்டித்தும் அவர் அந்த பழக்கத்தை விடவில்லை. இது ஊரில் உள்ள சிலருக்குதெரியவந்தது. அவர்கள் எங்கள் குடும்பத்தை பற்றி தவறாக பேச தொடங்கினார்கள். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அக்காவை வெட்டிக்கொலை செய்து விட்டேன்’’ என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory