» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் 1.3 கிலோ கஞ்சா பதுக்கியவர் கைது: பைக் பறிமுதல்!

புதன் 21, ஜனவரி 2026 5:02:15 PM (IST)

பாளையங்கோட்டையில் விற்பனைக்காக 1.3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர. 

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த நல்லகண்ணு மகன் ஆண்டி (53) என்பவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது. இதனையடுத்து கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஆண்டி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory