» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி பிரதான சாலையில் ஆபத்தான பள்ளங்கள் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 4:43:22 PM (IST)

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி பிரதான சாலையில் உள்ள ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் ப்ரியங்காவிடம் பாஜக வடக்கு மண்டல தலைவர் சுதாஅளித்தமனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள 60 அடி அகலமான பிரதான சாலையில், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை குழாய் பதிப்பு பணிகளுக்காகப் பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும், இந்தப் பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளன.
சுமார் 3 அடி அகலமும், அரை அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளங்கள் சாலையின் பல இடங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. இச்சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் மற்றும் முதியவர்கள் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாதபோது, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்தப் பள்ளங்களில் விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. உடனடியாக இந்தப் பள்ளங்களை மூடி, சாலையைப் போக்குவரத்திற்குத் தகுதியானதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் பக்கிள் ஓடை பகுதியில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தூத்துக்குடியையும் உலுக்கியது. அந்தத் துயரத்திற்குப் பிறகும் மாநகராட்சி நிர்வாகம் பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இதே போன்ற ஒரு விபத்து ஸ்டேட் பாங்க் காலனி சாலையிலும் நிகழ வாய்ப்புள்ளது.
மக்களின் உயிர் பாதுகாப்பை விட நிர்வாகத்தின் அலட்சியம் பெரிதா?" மேலும், மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சாலை மறுசீரமைப்பு நிதிகள் எங்கு செலவிடப்படுகின்றன? என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்நிகழ்வின் போது பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஓபிசி மாவட்ட பொதுச் செயலாளர் வன்னி ராஜ், மாவட்ட செயலாளர் சேர்ம குருமூர்த்தி, மதராஜன், சந்தனகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

சாக்லேட் தருவதாக கூறி சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ ட்டத்தில் வாலிபர் கைது!
வியாழன் 5, பிப்ரவரி 2026 8:28:55 AM (IST)

போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:47:50 PM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்கள் : ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 3:46:07 PM (IST)


BabuFeb 5, 2026 - 10:49:18 PM | Posted IP 162.1*****