» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்

வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)



மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என மத்திய நிதிஅமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவித்துள்ளார். அதன் பின் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை பார்க்க கல்லூரி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்தியாவிலேயே முதல் சைட்மியூசியம் ஆதிச்சநல்லூரில் அமைந்துள்ளது. இந்த சைட் மியூசியம் கடந்த 2023 ஆகஸ்ட் 5 தேதி கனிமொழி எம்.பி முன்னிலையில் மத்திய நிதிஅமைச்சர்நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து, உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழக தொல்லியல் நெல்லை ரெட்டியார் பட்டி மலையில் பொருநை அருங்காட்சியத்தினை அமைத்தது. 

தூத்துக்குடி மாவட்டம் தொல்லியல் தளங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கிடைத்த பொருள்களைஇவர்கள்காட்சிப்படுத்தினர். இவ்விடத்தில் 1 மாதத்தில் பல லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் முதல் சைட் மியூசியமான ஆதிச்சநல்லூர் மியூசியத்துக்கு பார்வையாளர் வருகை குறைந்தது. எனவே இவ்விடத்தில் சைட் மியூசியத்தினை மேம்படுத்தவேண்டும், தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் அடிக்கல் நாட்டிய இடத்தில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று தொல்லயில் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1.02.2026 அன்று மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் மற்றும் சுற்றுலா மேம்பாடு செய்யப்படும் என அறிவித்தார். இதனால் தொல்லியல் ஆர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட சைட் மியூசியம் மேம் படுத்துதல், உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைத்தல் போன்ற பணியுடன் கூடுதல் பணியாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதிச்சநல்லூர் மியூசியமும் மிகப்பிரமாண்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதிச்சநல்லூரை பார்வையிட கல்லூரி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தெற்கு கள்ளிகுளம் டி.என்.எம்.எஸ் கல்லூரி மாணவ மாணவிகள் தொல்லியல் பயணமாக ஆதிச்சநல்லூர் வருகை புரிந்தார்கள். ஆதிச்சநல்லூரில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூரில் பொறுப்பாளர் ஜெயப்பிருந்தா ஆகியோர் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து கிருஷ்ணாபுரம் கலைசிற்பங்கள், பொருநை அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு சென்றனர். நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் முருகவேல் , சித்ரா, ஜெகதா, ராய் ரிச் உள்பட பலர் உன் வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory