» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)
2026-27 நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நிகழவுள்ளதையடுத்து தற்போதைய திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறு கூட்ட அரங்கில் அவைத்தலைவர் மு. அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 26(1)-ன் கீழ் தமிழ்நாடு சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளேன்.
இதில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவைக்கு அளிப்பார். மேலும் வருகிற 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 193(1)-ன் கீழ் 2026-27 ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கைகளும், பேரவை விதி 189(1)-ன் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளிக்கப்படும்.
இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதைச் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாள் அதாவது 16-ம் தேதி அலுவல் ஆய்வுக் குழு தலைமையில் கூட்டப்பட்டு முடிவு செய்யப்படும்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சட்டப்பேரவை கூடிய நாள் முதல் என்ன பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை உலகெங்கிலும் இருந்து பார்த்துத் தெரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சிறப்புத் தீர்மானங்கள் மானிய கோரிக்கைகள் அனைத்தும் நேரலை செய்யப்பட்டு வருகிறது. கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது. கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் பெண் உட்பட 11 பேர் கைது: 2பேருக்கு கை முறிவு!
செவ்வாய் 7, ஜூலை 2026 11:20:29 AM (IST)

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)


