» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் முன்னிலை வகித்தார்.
பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக, மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி எண்கள் 151, 206, 113, 114 ஆகிய 4 மையங்கள் அருகிலுள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி எண்கள் 200, 266 ஆகிய 2 மையங்களை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஒப்புதல் பெறப்பட்டது.
தேர்தல் பொதுக்கூட்டங்கள்: 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்த, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு புறம்போக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் கூடுதலாக விரும்பும் இடங்களின் பட்டியலை தேர்தல் பிரிவில் வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
விண்ணப்ப நடைமுறைகள்: தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பொது இடங்களில் உரையாற்ற அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. வாக்குச்சாவடி மாற்றம் மற்றும் கூட்டங்கள் தொடர்பான கூடுதல் ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் எழுத்துப்பூர்வமாக வழங்க ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, வருவாய் கோட்டாட்சியர் பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் சிந்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தேர்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)


