» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற 'சாரல் திருவிழா' கலைவாணர் அரங்கில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இவ்விழாவைத் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான டாக்டர் ராஜீவ் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இன்று தொடங்கிய இச்சாரல் திருவிழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
சாரல் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று கடையம் மற்றும் கீழப்பாவூர் வட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கிராமியக் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம், கரகாட்டம், காவடியாட்டம் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தினமும் பல்வேறு வண்ணமயமான பண்பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)


