» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாகக் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக நீராடி மகிழ்ந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் காரணமாகக் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து காணப்பட்டது. புலியருவியும் தண்ணீரின்றி வறண்டதால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த லேசான சாரல் மழையின் காரணமாகக் குற்றாலம் அருவிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் சீராகக் கொட்டி வருகிறது. வறண்டு காணப்பட்ட புலியருவிக்கும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.
குற்றாலம், இலஞ்சி, தென்காசி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சாரல் திருவிழா தொடக்கம்:
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற 'குற்றாலம் சாரல் திருவிழா' நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது. தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, சீரான சூழல் நிலவுவதால் சாரல் திருவிழாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)

திருமணமான 5 மாதங்களில் கொடூரம்: புதுப்பெண் வெட்டிக்கொலை - கணவர் நீதிமன்றத்தில் சரண்!
செவ்வாய் 28, ஜூலை 2026 8:28:34 AM (IST)


