» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்க மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்து வருகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவில் முக்கிய மாற்றங்கள் மற்றும் கால நீட்டிப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 01.01.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், விண்ணப்பதாரர்களின் கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் 50 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில், இந்த நிதித் தகுதி 20 லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது 96% நிறைவடைந்துள்ளன. 37 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களைக் கொண்ட துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் மாவட்டம், அந்த நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டமாக இருக்க வேண்டும். இணையக் கேபிள்கள் (OFC) மற்றும் கருவிகளை (ONT) பராமரித்தல், தடையில்லா இணையச் சேவை மற்றும் பழுதுகளை விரைந்து சரிசெய்தல்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதள போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பாதுகாப்பு வைப்புத் தொகையாக 25,000 ரூபாய் (திரும்பப் பெறக்கூடியது) செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 2,00,000 ரூபாய் பாதுகாப்பு வைப்புத் தொகை செலுத்திய பின் பணி ஆணை வழங்கப்படும்.
இணையதள போர்டல் திறப்பு: 10.03.2026 முதல் 10.04.2026 வரை. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள்: ஏற்கனவே கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும், அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு அவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம். மேலதிக விவரங்களுக்கு 044-24965595 என்ற உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்: 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 7:53:47 AM (IST)

குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)


