» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)
நிதி நிறுவன மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத் தலைவர் ஏ.எம். மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சி.என். கிராமத்தைச் சேர்ந்த ஏ.எம். மூர்த்தி, நெல்லையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ. 25 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, அமலாக்கத்துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது.நேற்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு மூர்த்தி மற்றும் அவரது கூட்டாளியை வரவழைத்த அதிகாரிகள், நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மோசடி மற்றும் பணப்பரிமாற்ற விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இருவரையும் அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மூர்த்தியின் மனைவி சுதா, நெல்லை மாநகராட்சியில் திமுக பெண் கவுன்சிலராகவும், வரிவிதிப்பு மற்றும் பணிக்குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மூர்த்தி சில தினங்களுக்கு முன்புதான் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவைச் சந்தித்து, தனது கட்சியின் ஆதரவை திமுக கூட்டணிக்குத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)


