» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பள்ளி ஆசிரியைக்குச் சரமாரி அரிவாள் வெட்டு : குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:25:54 AM (IST)
வள்ளியூர் சந்தை அருகே பட்டப்பகலில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரைப் பின்தொடர்ந்து வந்து, அவரது கணவரே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை (42). இவரது மனைவி முத்துச்செல்வி (36). இவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக முத்துச்செல்வி தனது கணவரைப் பிரிந்து, வள்ளியூர் சந்தைத் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
அங்கிருந்தவாறு தினமும் நாகர்கோவிலுக்குச் சென்று பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் முத்துச்செல்வி மீது சேர்மதுரை கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை நாகர்கோவிலிலிருந்து பணி முடிந்து பேருந்து மூலம் வள்ளியூர் திரும்பிய முத்துச்செல்வியை, பேருந்து நிலையத்திலேயே சேர்மதுரை எதிர்கொண்டுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து சென்று பேச்சு கொடுத்த சேர்மதுரை, திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துச்செல்வியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு முத்துச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த வெறிச்செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தப்ப முயன்ற சேர்மதுரையை விரட்டிப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த முத்துச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களிடம் இருந்த சேர்மதுரையை மீட்ட போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி மாந்திரீக பூஜை: பெண்ணிடம் ரூ.1.54 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:44:23 AM (IST)

விபத்தில் லோடுமேன் உயிரிழந்த வழக்கு: ரூ.66.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:29:46 PM (IST)

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய 141-வது ஆண்டு திருவிழா: திருத்தேர் பவனி கோலாகலம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:18:30 PM (IST)


