» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு : டோல்கேட் மேலாளர் கைது!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:00:14 AM (IST)
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்தச் சுங்கச்சாவடியின் மேலாளரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதூர் பாண்டியாபுரம் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு ரசீது வழங்குதல், தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏராளமான பெண் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சுங்கச்சாவடியில் வடமாநிலத்தைச் சேர்ந்த அவதேஷ் சிங் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
மேலாளர் அவதேஷ் சிங், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாசச் செய்திகளை அனுப்பியும், பல்வேறு வகைகளில் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள், தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மேலாளர் அவதேஷ் சிங் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-இல் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
சனி 21, மார்ச் 2026 4:39:16 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரமலான் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 12:44:36 PM (IST)

பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)

அனுமதி பெறாத வாகனங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 20, மார்ச் 2026 4:27:46 PM (IST)

மின்சாரத்தைத் துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்களைத் திருடிச் சென்ற மர்ம கும்பல்: நெல்லையில் துணிகரம்!
வெள்ளி 20, மார்ச் 2026 8:34:32 AM (IST)


BabuMar 22, 2026 - 05:58:26 PM | Posted IP 104.2*****